அன்பானவர்களே,
நாம் நம் வாழ்வில் எவ்வளவோ இன்னல்களை கடந்து நம் வாழ்கை நிலையாக இருக்க என்னி சொந்த வீடு கட்ட நினைக்கிறோம், இன்னும் பலர் சிறப்பாக இருக்க வீடுகட்டிய பிறகு புதிய வீட்டிற்கு சென்றபின் பலர் நிம்மதி இல்லாமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் கட்டிய புதிய வீட்டை விற்றுவிடும் சூழ்நிலை பலருக்கு உண்டாகிறது, பலருக்கு தன் சொந்த வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர், வாஸ்து பார்த்து வீடுகட்டுகின்றனர். வாஸ்து நாள் பார்த்து பூசை செய்கின்றனர். நல்ல நாள் பார்த்து நல்ல முகூர்த்தம் பார்த்து பல யாகங்கள் செய்து புகுந்த வீட்டில் அவர்களால் ஏன் சந்தோஷமாக இருக்கமுடியவில்லை என யோசித்தீர்களா, வீட்டில் வாஸ்து குறைபாடா, தோஷமா, அல்லது தெய்வ குற்றமா, புரியாமல் தவிக்கின்றனர், எங்கள் அனுபவப்படி இதற்கு காரணம் வாஸ்து முறைபடி வாழாததாகும். வீடு கட்ட பூசைபோடுவதிலிருந்து புதுமணை புகு விழா வரை பல பூசை முறைகளை பின்பற்றிய நாம், தற்போதைய அவசர உலகத்தில் பண்டைய வழக்கத்தை மறந்து விடுகிறோம், அது நம் தப்பில்லை நமக்கு நல்லவற்றை கூறுபவர்கள் எவரும் இல்லை, இன்று எல்லாம் வியாபார நோக்கிலே நடக்கிறது, உதாரணமாக நாங்கள் வீடுகட்ட வாஸ்து பிளான் போட்டு கொடுத்து சில மாறுதல்களை செய்ய சொல்வோம், அதற்கு அந்த வீடுகட்டும் மேஸ்திரி மற்றும் இஞ்ஜினியர்கள் அப்படியெல்லாம் இல்லை அவர்களுக்கென்ன சொல்லிவிடுவார்கள் என்னும் கூறுவார்கள் மேலும் நாங்கள் இதுவரை பல நூறு வீடுகள் கட்டியுள்ளோம் இது வரை எந்தபிரச்சனைகளும் இல்லை என்று கூறுவார்கள். எங்களைப்பொருத்த வரை வாஸ்து என்பதே முழுமையாக 11 மாதங்களுக்கு பின்னர்தான் வேலைசெய்கிறது என்று சொல்வோம் அதனால்தான் வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்கவேண்டாம் என்று சிலர் சொல்வார்கள் வாடகை வீட்டிற்கு அக்ரிமென்ட 11 மாதம் மட்டுமே போடுவார்கள். வாடகை வீட்டிற்கு செல்பவர்கள் 11 மாதம் முடிந்ததும் வெறு வீட்டிற்கு சென்றுவிட்டால் பிரச்சனை இல்லை ஏன்னெனில் அந்த வீட்டின் வாஸ்து அமைப்பு நல்லதோ கெட்டதோ அதன் முழுபலனை அவ்வீட்டில் வசிப்பவர்கள் அனுபவிப்பார்கள்
வீடுகட்டியபிறகு வாஸ்து கோளாரினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கட்டிட மேஸ்திரிகளையோ அல்லது இஞ்ஜினியர்களையோ நாம் கேட்கப்போவதில்லை நம் விதி என நினைத்து ஜோதிடர்களையோ அல்லது வாஸ்து நிபுணர்களையோ சென்று பார்த்து பரிகாரம் செய்கின்றோம், இதனால் தங்களுக்கு எவ்வளவு செலவ நினைத்து பார்தீர்களா,
இதற்கெல்லாம் காரணம் நாம் வீடுகட்டும் போது செய்ய மறந்த சில பூசை முறைகள் தான், வீடு கட்ட ஆரம்பித்தது முதல் கிரஹபிரவேஷம் வரை தங்களின் குடும்ப நபர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குரிய நாளில் சில முக்கிய பூசைகள் செய்து வந்தால் மிக சிறப்புடன் வாழலாம்,
நீங்கள் கட்டும் வீடு நல்ல ஆன்மீகம் கலந்த தொழில் நுட்பத்துடன் இருகக் வேண்டும், அப்படி இருக்கவேண்டுமானால் அணைவரும் குறைந்தது கீழ்கண்ட நான்கு பூசை முறைகளை நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும்,
நாம் இன்றைய காலத்தில் மண்னை சோதிக்காமல் மண்ணை சுத்தி செய்யாமலும் வீடு கட்டுகிறோம் இதனால் வீட்டில் பல விதமான தோஷங்கள் ஏற்படுகின்றன மணையின் அடியில் இருக்கும் சல்லியங்களை நீக்கிவிட்டு வீடு கட்டினால் சிறப்பாக இருக்கும், அவ்வாறில்லமல் கட்டப்பட்ட வீடுகளில் அக் குடும்பத் தலைவர்களை வீட்டில் நிம்மதியாக தூங்க விடாமல் செய்துவிடும், இந்நிலை போக்க மூலிகை வேர் மற்றும் மண் பூசை செய்வதன் மூலம் குறைந்தது ஆறு மாதத்திற்குள் சல்லிய தோஷம் நீங்கி விடும்.
வாஸ்து பூசை என்ற பெயரில் இன்று பல கூத்துக்கள் நடைபெறுகின்றன, வாஸ்து பூசை ஏன் செய்கிறோம், நம் வீடு சிறந்த முறையில் கட்டிமுடிக்கவேண்டும் என்றுதானே செய்கிறோம். அதற்கு ஈசானியத்தில் ஒரு சிறு குழி வெட்டி பூசைசெய்தால் மட்டும் போதுமா? இப்பூசை பலன்கிடைக்கச்செய்யுமா? நிச்சயம் இப்பூசையால் எந்தபயனும் விளையாது, நாம் வீடுகட்ட ஆரம்பிக்கும் நாள் வாஸ்து நாளாகவோ, மூகூர்த்தநாளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நம் குடும்பத்தினருக்கு ஏற்றமுள்ள தேதியாக இருந்தாலே போதும் அதுவே நம் குடும்பத்தை ஏற்றமுடையதாக்கும், மேலும் பூமி பூசையன்று எட்டுதிசை மற்றும் மணையின் நடுப்பகுதி பிரமத்தின் அதிதேவதைகளிடம் ஆசிபெறவேண்டும், அதற்கு முன்னதாக நம் மணையின் எட்டு திசையிலும் எட்டு திசைக்குரிய மண் எடுத்து பூசை செய்து பரிகார யந்திரம் வரைந்து உருஏற்றி அதை எட்டு திசைகளிளும் புதைத்து வழிபட்டு பூமி பூசைசெய்தால் கட்டிட வேலை எவ்வித தடங்களும் இல்லாமல் நடைபெறும்..
இப்பூசை நிச்சயம் அணைவரும் செய்யவேண்டிய ஒன்றாகும். எந்த ஒரு வீடும் மூடாமல் (மோல்டிங்) இல்லாமல் இருந்தால் அதற்கு குட்டிச்சுவர் என்று பெயர். எப்பொழுது மேல்தளம் மூடுகிறோமோ அந்த கணம் முதல் அது வீடு என்ற அந்தஸ்தை பெறுகிறது, நம்வீடு நம்வசம் இருக்க வேண்டும். வீட்டில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும், குடும்பத்தில் பணப்பிரச்சணை மற்றும் மருத்துவ செலவு வராமல் இருக்கவேண்டும், என்றால் இப்பூசையை செய்யவேண்டும், குடும்பத் தலைவன் தன் கையால் மேல்தளத்தை மூடி அந்த வீட்டின் பவரை தன்மனைவியிடம் கொடுக்கும் இந்த முகடு பூசைசெய்தால் மட்டுமே அந்த வீட்டில் எப்பொழுதும் பஞ்ச பூத சக்திகள் சம அளவில் நிறைந்து அருளும் பொருளும் நிறைந்து காணப்படும், நோய் நொடிகள் அன்டாமல் நீண்டகாலம் வாழலாம், நம் பிள்ளைகள் எப்பொழுதும் நம் எண்ணப்படி சிறப்பாக வாழ்வார்கள்
ஒரு வீட்டின் பிரதான வாசலில் வைக்கப்படும் நிலைக்கதவே அந்த வீட்டின் அதிர்ஷ்ட வாசல் ஆகும், அப்பேற்பட்ட வாசல் மூலம் நமக்கு நல்ல அதிர்வுகள் மட்டுமே உள்ளே வந்தால் அது உண்மையில் அதிர்ஷ்ட வாசல் ஆகும், நம் வீட்டில் திருஷ்டி செய்வினை தோஷம் நம்மை தாக்காமல் இருக்க வாசகால் வைக்கும் போதே அதனடியில் நவகிரஹ கற்களும் தீய அதிர்வுகளை உள்ளே வராமல் தடுக்கும் யந்திரத்தை வைத்து முறைபடி பூசைசெய்து வைக்கவேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானவையாகவே இருக்கும்,
கணபதி ஜோதிடம் . ஓசூர் - 9095355366